கர்ணன் மற்றும் துரியோதனன் பற்றியும் ஒரு கர்ண பரம்பரை கதை ஒன்று உண்டு அதை பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
கர்ணன் கொடை மூலம் புகழ் பெற்றுது குறித்து துரியோதனன் சிறிது பொறாமை கொண்டான். நம்மால் அரசன் ஆக்கப்பட்ட கர்ணன் புகழ் பெற்றுது போல் தானும் புகழ் பெற தானம் தர முடிவு செய்தான்.
நாள் குறிக்கப்பட்டது, மலை அளவு செல்வம் குவிக்க பட்டு துரியோதனன் தானம் செய்ய துவங்கினான். மக்கள் வர வர துரியோதனன் வாரி வாரி வழங்கினான். ஆனால் சிறிது நேரத்தில் அவன் சோர்வுற்றான். அவனுக்கு கர்ணனால் மட்டும் எப்படி சோர்வுறாமல் வாரி வழங்க முடிகறது என்று கண்டுபிடிக்க கர்ணனை வரவழைத்தான்.
கர்ணனும் வந்தான், துரியோதனன் மலை அளவு உள்ள செல்வத்தை தானம் வழங்க சொன்னான். கர்ணன் வரிசை இருந்த முதல் ஆளை கூப்பிட்டு மலை அளவு செல்வதையும் அவனையே வைத்து கொள்ள சொன்னான்.
தானம் செய்வது என்று முடுவு செய்துவிட்டு அதை ஒருவருக்கு கொடுத்தல் என்ன? நூறு பேருக்கு கொடுத்தல் என்ன? என்று விளக்கம் சொன்னான். துரியோதனன் வாயடைத்து போனான். அவனுக்கு கர்ணன் ஏன் கொடை வள்ளல் என்று புகழ் பெற்றான் என்ற அர்த்தம் புரிந்தது.
ரொம்ப நாளாக தேடிய பதில் இன்று கிடைத்தது.மிக்க நன்றி.என்னிடம் ஒரு பரம்பரை காதை ஒன்று உள்ளது. அனுப்பலாமா.என் kaipesi-9916535241
ReplyDelete