இராமாயணத்தில் அதிகம்
போற்றபடாத கதாபத்திரம்
ஒன்று உண்டு எனில் அது ஊர்மிளை
தான். கைகேயி ராமனை
காட்டுக்கு செல்ல கட்டளை இட்ட போது லக்ஷ்மனும்
ராமனுடன் செல்ல முடிவு
செய்தான். ஊர்மிளை லக்ஷ்மன் உடன் செல்ல முடிவு செய்த போது, தனது
தாய் தந்தையை பார்த்து கொள்ளுமாறு லக்ஷ்மணன் வேண்டினான். ஊர்மிளையும் கணவனின் வேண்டுகோளுக்கு இணங்க அயோத்தியில் தங்கிவிட்டார்.
லக்ஷ்மன் காடு
சென்றவுடன், ராமன் சீதையை காக்கும் பொருட்டு தூங்காமல் காவல் காத்தார். அப்போது நித்திரை தேவி வந்து ஆட்கொள்ள பார்த்தது, ஆனால் லக்ஷ்மன்
தனக்கு காவல் காக்கும் பொறுப்பு இருப்பதால் தன்னை தயவுசெய்து ஆட்கொள்ள
வேண்டாம் என்று வேண்டினான். அதற்கு நித்திரை, லக்ஷ்மனுக்கு பதில் வேறு
யாராவது லக்ஷ்மனுடைய களைப்பை நீக்குமாறு தூங்கினால் லக்ஷ்மணை ஆட்கொள்ள
மாட்டேன் என்றது.
இதை கேட்ட உடன் மகிழ்ந்த லக்ஷ்மன், தன் மனைவி ஊர்மிளை இடம் சென்று இதை விளக்கும்மாறு கூறினான். நித்திரை கூறியதை கேட்ட ஊர்மிளை, கணவனின் சோர்வை வாங்கிகொண்டு 24 மணி நேரமும் நித்திரை ஆழ்ந்தாள்.
பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அயோத்தி திரும்பிய லக்ஷ்மன், ராமன் பட்டாபிஷேகம் பிறகு பதினான்கு ஆண்டுகள் நித்திரை ஆழ்ந்தார்.
இப்படியாக இருபத்தி எட்டு ஆண்டுகள் கணவனின் அன்பு கிடைக்காத, ஊர்மிளை சீதை விட போற்ற பட வேண்டிய கதாபத்திரம் ஆகும்.
Thanks for posting this blog! keep posting!
ReplyDeleteVisit Best Astrologer in Amravati